/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காரில் யானை தந்தங்கள் கடத்தல் 7 பேரிடம் வனத்துறை விசாரணை
/
காரில் யானை தந்தங்கள் கடத்தல் 7 பேரிடம் வனத்துறை விசாரணை
காரில் யானை தந்தங்கள் கடத்தல் 7 பேரிடம் வனத்துறை விசாரணை
காரில் யானை தந்தங்கள் கடத்தல் 7 பேரிடம் வனத்துறை விசாரணை
ADDED : ஜூன் 16, 2024 01:59 AM
கன்னிவாடி:திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே காரில் யானை தந்தங்களை கடத்திய 3 பெண்கள் உட்பட 7 பேரிடம் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் பகுதியில் யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து மதுரை, திருச்சி, திண்டுக்கல் மாவட்ட மத்திய வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவினர், திண்டுக்கல் வன பாதுகாப்பு படை, கன்னிவாடி வனச்சரகத்தினர் உள்ளிட்டோரை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தந்தம் கடத்தல்காரர்களை கண்காணித்து வந்தனர்.
இதனிடையே நேற்று மதியம் 1:00 மணிக்கு கன்னிவாடி அருகே வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ஒரு ஜோடி யானை தந்தங்கள் இருந்தன.
தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் காரில் வந்த கன்னிவாடியை சேர்ந்த சோமசுந்தரத்தை 54, வன அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இவரது தகவல்படி மதுரை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேரிடம் விசாரணை நடக்கிறது.