/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுத்தீயால் வாகனங்களுக்கு தடை
/
காட்டுத்தீயால் வாகனங்களுக்கு தடை
ADDED : மே 01, 2024 07:24 AM
கொடைக்கானல் : கொடைக்கானல் பூம்பாறை மன்னவனுார் வனப்பகுதியில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஏதுவாக மேல்மலை கிராமங்களுக்கு சுற்றுலா வாகனங்கள் , கனரக வாகனங்கள் செல்ல இரண்டு நாள் தடை செய்யப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிக்கை மன்னவனுார், பூம்பாறை வனப்பகுதியில் ஒரு வாரமாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. கட்டுப்படுத்த முடியாத நிலையில் வனத்துறையினர் வாகனங்கள், தீயணைப்பு துறை வாகனங்கள் எளிதில் சென்று வர ஏதுவாகவும், தீயை விரைவில் அணைக்க இன்றும், நாளையும் இரண்டு தினங்கள் பூம்பாறை பிரிவிலிருந்து மன்னவனுார், கூக்கால் ரோடுகளில் சுற்றுலா வாகனங்கள் , கனரக வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. உள்ளூர் கிராம மக்கள் வாகனங்களில் சென்றுவர எவ்வித தடை இல்லை என தெரிவித்துள்ளார்.