/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் அருகே மலை பகுதியில் காட்டு தீ
/
நத்தம் அருகே மலை பகுதியில் காட்டு தீ
ADDED : பிப் 23, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அருகே மூங்கில்பட்டி பகுதி பெருமாள்மலை அடிவார பகுதிகளில் விவசாயிகள் மா, தென்னை உள்ளிட்ட மரங்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
மலை அடிவார பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டு தீ பற்றி எரிந்தது. நத்தம் தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் தீயில் கருகின.