/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் காட்டுத்தீ: ஏராளமான வனநிலங்கள் தீக்கிரை
/
கொடைக்கானலில் காட்டுத்தீ: ஏராளமான வனநிலங்கள் தீக்கிரை
கொடைக்கானலில் காட்டுத்தீ: ஏராளமான வனநிலங்கள் தீக்கிரை
கொடைக்கானலில் காட்டுத்தீ: ஏராளமான வனநிலங்கள் தீக்கிரை
UPDATED : மே 02, 2024 11:22 AM
ADDED : மே 01, 2024 11:31 PM

கொடைக்கானல்:கோடை வெயில் மலைப்பகுதியில் தகிக்கும் நிலையில், வனப்பகுதியில் உள்ள புல் உள்ளிட்ட தாவரங்கள் காய்ந்துள்ளன. ஒரு வாரமாக கொடைக்கானல் பூம்பாறை, கூக்கால் வனப்பகுதியான பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை, மாணிக்கம் குடை தொட்டி உள்ளிட்டவை தீப்பற்றி எரிகிறது. வனத்தில் அடுக்கப்பட்ட அன்னிய மரங்கள் குவியல் தீயில் கருகின.
பத்து தீயணைப்புத்துறை வாகனங்கள், வனத்துறை, தன்னார்வக் குழுவினர் தீயை அணைக்கும் முயற்சியில் போராடுகின்றனர். சூறைக்காற்று, சுட்டெரிக்கும் வெயில் என சோலை மரங்கள் கொழுந்து விட்டு எரிகிறது.
காட்டுத் தீயால் மேல்மலை சாம்பல் காடாக மாறி, புகை மண்டலமாக காட்சியளிக்கிறது; சுற்றுச்சூழல் பாதிப்படைந்துள்ளது. மரங்கள், வனவிலங்குகள் காட்டுத் தீயால் பாதித்துள்ளன.
பூம்பாறையிலிருந்து மன்னவனுார், கூக்கால் பிரிவு இடையே சுற்றுலா, கனரக வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டு நுாற்றுக்கணக்கான பணியாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளனர்.
வனச்சுற்றுலா தலத்தில் செயல்படும் கடைகளும் அடைக்கப்பட்டு அங்குள்ள கடை உரிமையாளர்கள்தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

