நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் உதவி வனப்பாதுகாவலராக இருந்தவர் சக்திவேல் 52. நேற்று முன்தினம் கொடைக்கானலில் அலுவலக பணிகளை முடித்து மதுரையில் உள்ள வீட்டிற்கு சென்றார்.
இரவு உணவு சாப்பிட்டு துாங்க சென்றவர் காலையில் குடும்பத்தினர் எழுப்பி உள்ளனர். அசைவற்ற நிலையில் இருந்ததால் அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் சோதித்த போது ஏற்கனவே மாரடைப்பால் இறந்தது தெரிந்தது. வனத்துறை உயரதிகாரிகள், வனத்துறையினர் மரியாதை செலுத்தினர்.