/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூட்டணியை பழனிசாமி அமைப்பார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி

ADDED : மார் 09, 2025 03:33 AM
திண்டுக்கல் : ''அ.தி.மு.க., மகத்தான வெற்றியை பெறுகின்ற அளவில் கூட்டணியை பொதுச்செயலர் பழனிசாமி அமைப்பார் ''என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., கூட்டணியை பொறுத்தவரை 6 மாதம்பின்தான் முடிவு எடுக்கப்படும் என பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். அந்த முடிவு தான் இறுதியானது. அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும் கூட்டணியை அவர் அமைப்பார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்., டி.டி.வி., தினகரனைசேர்ப்பதில்லை என்ற கருத்திற்கு முழு ஆதரவு தருகிறோம் என்றார். அமைப்பு செயலர் ஆசை மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார் முன்னிலை வகித்தனர்.
அமைப்பு செயலாளர் மருதராஜ், மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,பழனிசாமி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜமோகன்பங்கேற்றனர்.