/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளிக்குமுன்னாள் மாணவர்கள் சீர்
/
அரசு பள்ளிக்குமுன்னாள் மாணவர்கள் சீர்
ADDED : மார் 01, 2025 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டி அரசு உயர் நிலைப்நிலைப்பள்ளிக்க கல்வி உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் ஊர்வலமாக வந்து வழங்கினர்.
சின்னாளபட்டி அண்ணா தினசரி மார்க்கெட் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா, முன்னாள் மாணவர்கள் சங்கமம், விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
பள்ளிக்கு சீர் வரிசையாக பீரோக்கள், டேபிள், நாற்காலி, நோட்டு புத்தகங்களை முன்னாள் மாணவர்கள் சார்பில் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பள்ளிக்கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.