/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருத்துவ மாணவர்களுக்கு இலவச அரசு பஸ்
/
மருத்துவ மாணவர்களுக்கு இலவச அரசு பஸ்
ADDED : ஆக 21, 2024 08:27 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் கல்லுாரியிலிருந்து மருத்துவமனைக்கு வந்து செல்லும் வகையில் இன்று முதல் அரசு பஸ் இலவசமாக செயல்பட உள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி நல்லாம்பட்டி ஒடுக்கம் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. தற்போது 200க்கு மேலான மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இவர்கள் தினமும் கல்லுாரியிலிருந்து அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்ய மருத்துவமனை நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அypfkih மாவட்ட நிர்வாகத்தினர் போக்குவரத்து கழக அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தி
னமும் காலை,மாலை மாணவர்களை கல்லுாரியிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையில் அரசு பஸ்சை இலவசமாக இயக்க முடிவு செய்யப்பட்டது. அந்த பஸ் இன்று முதல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலிருந்து மாணவர்களை மருத்துவ கல்லுாரிக்கு அழைத்து செல்ல உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.