ADDED : மார் 01, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே பாலப்பன்பட்டி பகுதியில் போதிய பராமரிப்பு முறைகள் தெரியாமல் விளைவிக்கப்பட்ட தர்பூசணி மகசூல் பாதியாக குறைந்துவிட்டது. பாலப்பன்பட்டி கிராமத்தில் தர்பூசணி புதிதாக நடவு செய்யப்பட்டுள்ளது.
கார்த்திகையில் நடப்பட்ட தர்ப்பூசணி தற்போது விளைச்சல் கண்டுள்ள நிலையில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பயிரை பராமரிப்பதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் குறித்து சரிவர தெரியாததால் மகசூல் பாதியாக குறைந்து உள்ளது. நன்றாக பராமரித்து வந்தால் ஏக்கருக்கு 15 டன் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் விளைவதற்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றாததால் 7 டன் மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது.
தர்பூசணியை விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.