/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காந்திகிராம பல்கலை விடுதி மாணவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய வெளியேற உத்தரவு
/
காந்திகிராம பல்கலை விடுதி மாணவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய வெளியேற உத்தரவு
காந்திகிராம பல்கலை விடுதி மாணவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய வெளியேற உத்தரவு
காந்திகிராம பல்கலை விடுதி மாணவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய வெளியேற உத்தரவு
ADDED : ஏப் 19, 2024 12:58 AM
சின்னாளபட்டி:ஓட்டுப்பதிவிற்கு செல்ல மறுத்து திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை விடுதியில் தங்கிய மாணவர்களை இரவுடன் இரவாக வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டது.
இன்று (ஏப்., 19) லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையில் வெளிமாநில, பிற மாவட்ட மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் தனித்தனியாகவுள்ள விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.
பல்கலையின் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் பலர், தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டனர். விடுதி மாணவர்கள் ஓட்டுப்பதிவு செய்ய சொந்த ஊர் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். நாளை(ஏப்., 20) வகுப்புகள் வழக்கம்போல நடக்கும் என்ற அறிவிப்பால், ஒரே நாளில் சென்று வர இயலாத 62 மாணவர்கள், 50க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியிலேயே தங்கினர். அவர்களை அனுப்ப மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை அலுவலர்கள் பல்கலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.
நேற்றிரவு 8:30 மணிக்கு பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் மாணவர், மாணவியர் விடுதிகளை ஆய்வு செய்தார். தங்கியிருந்த மாணவர்களை, இரவுடன் இரவாக சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய உத்தரவிட்டார். மாணவியரின் பெற்றோருக்கு தெரிவித்து இன்று அதிகாலை வந்து அவர்களை அழைத்து செல்லவும் அறிவுறுத்தினார்.

