/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் 2234 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாடு
/
மாவட்டத்தில் 2234 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாடு
மாவட்டத்தில் 2234 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாடு
மாவட்டத்தில் 2234 இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபாடு
ADDED : செப் 08, 2024 05:11 AM
திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திண் டுக்கல் மாவட்டத்தில் 2234 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாவட்டத்தை பொறுத்தவரை ஹிந்து முன்னணி, சிவசேனா, ஹிந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் இரவு வரை மாவட்டம் முழுவதும் 2234 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு அடி உயரம் முதல் 12 அடி வரையிலான சிலைகளை வைக்கப்பட்டுள்ளன.
சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பூஜை பொருட்களுடன் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதைதொடர்ந்து மாவட்டத்தில் 1850 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.