/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தனியாக சுற்றும் காதலர்களை கத்தியைக் காட்டி மிரட்டி,தாக்கி நகை பறித்த கும்பல் கைது: 15 அரை பவுன் மீட்பு
/
தனியாக சுற்றும் காதலர்களை கத்தியைக் காட்டி மிரட்டி,தாக்கி நகை பறித்த கும்பல் கைது: 15 அரை பவுன் மீட்பு
தனியாக சுற்றும் காதலர்களை கத்தியைக் காட்டி மிரட்டி,தாக்கி நகை பறித்த கும்பல் கைது: 15 அரை பவுன் மீட்பு
தனியாக சுற்றும் காதலர்களை கத்தியைக் காட்டி மிரட்டி,தாக்கி நகை பறித்த கும்பல் கைது: 15 அரை பவுன் மீட்பு
ADDED : ஜூலை 01, 2024 10:08 PM

திண்டுக்கல்;திண்டுக்கல்லில் தனியாக சுற்றி திரியும் காதலர்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 15 அரை பவுன் நகையை மீட்டுள்ளனர்.
திண்டுக்கல் ஓடைப்பட்டி, ரங்கநாதபுரம், கரட்டு மேடு உள்ளிட்ட பகுதிகளில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், மாணவர்கள்,இளம் பெண்கள் என ஏராளமான காதல் ஜோடிகள் தனிமையில் இருப்பதற்காக செல்கின்றனர். நீண்ட நாட்களாக இவர்களை கவனித்த கொள்ளை கும்பல்கள் தனியாக இருக்கும் காதல் ஜோடி இடம் போய் கத்தியை காட்டி மிரட்டி தாக்கி அவர்களிடமிருந்து தங்கச் செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு வெளியில் சொன்னால் உங்களை ஏதாவது செய்து விடுவோம் என்று மிரட்டி அங்கிருந்து தப்பி செல்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தாலுகா,தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., அருண் நாராயணன் உள்ளிட்டோர் தலைமையில் கொள்ளை கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். கொள்ளை கும்பல்களை பிடிக்க போலீசாருக்கு சற்று குழப்பம் இருந்தது. இதையடுத்து திண்டுக்கல் இ.பி., காலனியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாருக்கு குற்றவாளிகளை அடையாளம் காண்பித்தார். நேற்று திண்டுக்கல் பழநி ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய அடிப்படையில் 4 வாலிபர்கள் 2 டூவீலரில் வந்தனர்.
போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கரட்டுமேடு,ஓடைப்பட்டி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக இருக்கும் காதல் ஜோடிகளை மிரட்டி நகை பறித்த கும்பல் என தெரிந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் பொன்னகரம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் 31, ரங்கநாதபுரம் செந்தூர் பாண்டி29, மாலப்பட்டி சிவசக்தி 31, ரவுண்ட் ரோடு ஷேக் பரீத் 21, என்பது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்கள் வீட்டில் உருக்கிய நிலையில் இருந்த 15 அரை பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.