ADDED : மே 11, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் ரோஜா பூங்காவில் பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள் பயணிகளை ஈர்த்துள்ளது. தோட்டக்கலைத்துறை சில ஆண்டுகளுக்கு முன் அப்சர்வேட்டரியில் 10 ஏக்கர் பரப்பில் இப்பூங்காவை துவக்கியது.
ரோஜா பூங்காவில் 1500 வகையான ரோஜா 16 ஆயிரம் செடிகள் உள்ளன.
இச்செடிகள் கவாத்து எடுக்கப்பட்டு களப்பணிகள் நடந்த நிலையில் தற்போதைய மழைக்கு பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.
இம்மாத இறுதியில் மேலும் பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகள் மனம் கவரும் வண்ணம் உள்ளது.