ADDED : ஆக 15, 2024 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் சலேத் மாதா சர்ச் பெருவிழாவை முன்னிட்டு நடந்த மின்னொளி தேர்பவனியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இச் சர்ச் திருவிழா ஆக.4 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது .
10 நாட்கள் நடந்த இத்திருவிழாவில் நவ நாள் முடிந்து நேற்று திருப்பலியுடன் மின்னொளி திருத்தேர் பவனி,ஆண்டு பெருவிழா நடந்தது.
மதுரை அந்தோணி பாப்புச்சாமி, பாதிரியார் சிலுவை மைக்கேல்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சலேத் மாதா சர்ச்சிலிருந்து புறப்பட்ட தேர்பவனி நகரில் ஊர்வலமாக வந்து மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவர் சர்ச் வந்தடைந்தது. இன்று மூஞ்சிக்கல் சர்ச்சிலிருந்து புறப்பட்டு சலேத் அன்னை சர்ச் வந்தடைகிறது.
இதில் ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை தொடர்ந்து நகர் பகுதி இரவில் மின்னொளியில் ஜொலித்தது.