/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பக்ரீத் பண்டிகைக்காக அய்யலுாரில் ரூ.3.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
பக்ரீத் பண்டிகைக்காக அய்யலுாரில் ரூ.3.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகைக்காக அய்யலுாரில் ரூ.3.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகைக்காக அய்யலுாரில் ரூ.3.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : ஜூன் 13, 2024 05:28 PM

வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலுார் வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.3.50 கோடிக்கு நேற்று ஆடு, கோழிகள் விற்பனையாயின.
பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய சந்தை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கில் ஆடுகள், கோழிகளை விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பாக நடக்க காலை 9:00 மணிக்கு முடிந்தது. சந்தை வளாகத்தில் இடம் போதாமல் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிலும் விற்பனை நடந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பக்ரீத் பண்டிக்கைக்காக தேவை அதிகம் இருக்கும் என்பதால் செம்மாறி ஆடுகளின் வரத்தும், விலையும் அதிகம் இருந்தது. ஆடுகள், கோழிகள் விற்பனை ரூ.3.50 கோடிக்கு நடந்தது. நாட்டு கோழி (உயிருடன் எடை) கிலோ ரூ.450, செம்மறி ஆடு கிலோ ரூ.1000, வெள்ளாடு ரூ.900, சண்டை சேவல் ரூ.10,000 என விற்கப்பட்டன. வழக்கமாக இறைச்சி கடைக்கு ஆடுகளை வாங்க வந்த வியாபாரிகள் விலை ஏற்றத்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.