ADDED : செப் 15, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய 2ம் கட்ட அஸ்மிதா டேக்வாண்டோ கேலோ இந்தியா பெண்களுக்கான லீக் போட்டிதிண்டுக்கலில் நடந்தது. செப். 11 முதல் 14 வரை நடந்த போட்டியில் திண்டுக்கல் ஜி.டி.என்.,கலை கல்லுாரி மாணவி அனுஷியா பிரியதர்ஷினி 67 கிலோ எடைபிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் தமிழக அரசின் எம்.ஐ.எம்.எஸ்., என்ற திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவியை கல்லுாரியின் தாளாளர் ரத்தினம், கல்லூரி இயக்குநர் துரை, முதல்வர் சரவனண், உடற்கல்வி இயக்குநர் ராஜசேகர், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் வாழ்த்தினர்.