/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டீசல் இன்றி நடுவழியில் நின்ற அரசு பஸ்கள்; இயக்கத்தில் அதிகாரிகள் 'அக்கப்போர்' மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் அவதி
/
டீசல் இன்றி நடுவழியில் நின்ற அரசு பஸ்கள்; இயக்கத்தில் அதிகாரிகள் 'அக்கப்போர்' மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் அவதி
டீசல் இன்றி நடுவழியில் நின்ற அரசு பஸ்கள்; இயக்கத்தில் அதிகாரிகள் 'அக்கப்போர்' மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் அவதி
டீசல் இன்றி நடுவழியில் நின்ற அரசு பஸ்கள்; இயக்கத்தில் அதிகாரிகள் 'அக்கப்போர்' மாணவர்கள், கூலி தொழிலாளர்கள் அவதி
ADDED : செப் 02, 2024 12:23 AM

சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பஸ் இயக்கத்தில் அதிகாரிகள் மெத்தனப்போக்கால் டீசல் தீர்ந்த நிலையில் நடுவழியில் நிற்பது,பஸ் ஸ்டாப்களில் நிற்காமல் செல்வது போன்ற பிரச்னைகளால் மாணவர்கள் தனியார் பஸ்களில் விபரீத பயணம் மேற்கொள்வது தொடர்கிறது .
திண்டுக்கல்லிருந்து ஆத்துார் ,கொடைரோடு, சித்தையன் கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு சின்னாளபட்டி வழியே அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன .இப்பகுதியில் உள்ள கட்டட தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் பஸ்களின் சேவையை நம்பி உள்ளனர்.
ஆனால் பஸ்கள் சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்டை புறக்கணித்து செல்வது, பஸ் நிறுத்தங்களில் பயணிகளை ஏற்றிச்செல்வதை தவிர்ப்பது, நடுவழியில் பழுதாகி நிற்பது போன்ற பிரச்னைகள் சமீப காலமாக அதிகரித்துவருகிறது.
அதன்படி நேற்று காலை சித்தையன்கோட்டை செல்லும் (9எப்) அரசு டவுன் பஸ்சுக்காக கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் பூஞ்சோலை பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தனர்.
அங்கு வந்த பஸ் வழக்கம் போல் நிற்காமல் செல்ல முயன்றது. பேரூர் தி.மு.க., துணைச் செயலாளர் ஜெயகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர் ராஜூ, தி.மு.க., பிரமுகர்கள் மணி, பொம்மையா, செல்லையா உள்ளிட்டோர் பஸ்சை மறித்தனர்.
நிற்காமல் செல்வது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்என எச்சரித்து அனுப்பினர்.
பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்வதால் மாணவர்கள் தனியார் பஸ்களின் படிக்கட்டு ,பின்புறத்தில் தொங்கியப்படி பயணிப்பது தொடர்கிறது.
இதனிடையே நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் டெப்போவை சேர்ந்த திண்டுக்கல்லில்இருந்து ஒட்டன்சத்திரம் சென்ற அரசு டவுன் பஸ் (டி.என் 57, என் 1679) இரவு 7:30 மணிக்கு ரெட்டியார்சத்திரம் அருகேவரும்போது டீசல் தீர்ந்து நின்றது.பயணிகள் அடுத்து வந்த மற்றொரு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.அரசு பஸ்களின் நிலையால் மக்கள்தான்தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர்.பழநி: பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து மதியம் 1:00 மணிக்கு அரசு பஸ் பயணிகளுடன் கிளம்பியது. வழித்தடம் 19ல் செயல்படும் தொப்பம்பட்டி, கீரனுார் செல்லும் பஸ் ஸ்டாண்டிலிருந்து சிறிது துாரம் சென்றவுடன் காந்தி மார்க்கெட் ரோடு- புது தாராபுரம்ரோடு- மார்க்கெட் ரோடு, சந்திப்பில் உள்ள வேல் ரவுண்டானாஅருகே நின்றது. போக்குவரத்து கழகத்தினர் உடனடியாக பஸ்சை சரி செய்து பயணிகள்பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.