/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டிராக்டர் மீது அரசு பஸ் மோதி விபத்து : பலி 3
/
டிராக்டர் மீது அரசு பஸ் மோதி விபத்து : பலி 3
ADDED : ஜூன் 23, 2024 09:45 AM

ரெட்டியார்சத்திரம், : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதியதில் 3 பேர் பலியாயினர்.
ரெட்டியார்சத்திரம் அருகே குதிரையன்குளத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கருப்பண்ண சுவாமி கோயில் திருவிழா நடந்தது.
இதில் பங்கேற்க சித்தையன்கோட்டை சேடபட்டியை சேர்ந்த 16 பேர் டிராக்டரில் சென்றனர். அப்பகுதி செல்வக்குமார் டிராக்டரை ஓட்டினார்.
கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து நேற்று அதிகாலை 3:30 மணிக்கு ஊருக்கு புறப்பட டிராக்டர் தயாரானது. 14 பேர் ஏறிய நிலையில் மேலும் இரண்டு பேர் வருகைக்காக திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலை ரோட்டோரத்தில் டிராக்டரை செல்வக்குமார் நிறுத்தியிருந்தார்.
அப்போது பழநி சென்ற அரசு பஸ் டிராக்டரில் மோதியது. இதில் அனைவரும் துாக்கி வீசப்பட்டதில் சேடபட்டி பெரியண்ணன் 33, இறந்தார். காயமடைந்த நாகேஸ்வரன் 28, சுரேஷ் 28, செந்தில்குமார் 31, அழகுமலை 34, அசோக்குமார் 30, உட்பட 14 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகுமலை, அசோக்குமார் ஆகியோர் இறந்தனர். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.