நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: ''அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றிடைந்துள்ளது ''என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
பழநியில் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. மாநாட்டின் முதல் நாளில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். 1.25 லட்சம் பக்தர்களுக்கு முதல் நாள் மாநாட்டில் உணவு வழங்கப்பட்டது. 50ஆயிரம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.