ADDED : ஜூலை 08, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் பாலக்காடு -சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரம் -மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ஆகியவை நாள்தோறும் இயக்கப்படுகின்றன. வாரம் ஒரு முறை மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ஒட்டன்சத்திரம் வழியாக செல்கிறது.
ரயில்வே கட்டணம் குறைவாக இருப்பதால் ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஏராளமானோர் ரயில்களில் பயணிக்கின்றனர். ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றால் ஒதுக்கப்பட்ட பெட்டிகளை எளிதில் அடையாளம் காண முடியவில்லை. பயணிகள் சுலபமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் போர்டு வசதி ஏற்படுத்த வேண்டும்.