/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடை துார்வாராததால் சுகாதாரக்கேடு
/
சாக்கடை துார்வாராததால் சுகாதாரக்கேடு
ADDED : மார் 01, 2025 04:43 AM

பழநி : பழநி இடும்பன் இட்டேரி ரோட்டில் பல ஆண்டுகளாக சாக்கடைதுார் வாராததால் சுகாதாரக் கேடாக உள்ளது.
பழநி இடும்பன் மலையில் இருந்து திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் இடும்பன் இட்டேரி ரோடு உள்ளது. பல ஆண்டுகளாக சாக்கடை துார்வாராததால் குப்பை, மண் படிந்து கழிவு நீர் வெளியேறாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படுகிறது .
அப்பகுதி ஓய்வு தனியார் ஊழியர் மயில்சாமி கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். இரு ஆண்டுகளாக இப்பகுதியில் சாக்கடையை துார்வாருவதும் இல்லை. புதிதாக சாக்கடை அமைக்கவும் இல்லை. இதனால் சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.இதனால் இவ்வழியாக செல்லும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்'' என்றார்.