/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுரங்கப்பாதை அமைக்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
சுரங்கப்பாதை அமைக்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சுரங்கப்பாதை அமைக்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சுரங்கப்பாதை அமைக்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஆக 27, 2024 01:45 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மகேஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை (209) இணைக்கும் சர்வீஸ் ரோட்டில் ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை 7ஐ இணைக்க ஜல்லிப்பட்டி, தொப்பிநாயக்கன்பட்டி மக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை கோரி என்.எச்.ஏ.ஐ., தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அல்லது சர்வீஸ் ரோடு அமைப்பது குறித்து தொழில்நுட்பத்தில் தகுதியான அதிகாரிகளால் முடிவு எடுக்கப்படும். நீதிமன்றம் தலையிட்டு கண்மூடித்தனமாக வழிகாட்டுதல்களை வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

