/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி
/
ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயிலில் பூக்குழி
ADDED : மே 30, 2024 04:13 AM

நெய்க்காரபட்டி: பழநி நெய்க்காரபட்டி அருகே பெரிய கலையம்புத்துாரில் உள்ள ஹை கோர்ட் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
இக்கோயில் வைகாசி திருவிழா மே 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 21ல் முகூர்த்தக்கால் நடுதல், காப்பு கட்டுதல், சுவாமி சாட்டுதல் நடைபெற்றது.
நேற்று முன்தினம் (மே 28) சண்முக நதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று (மே 29 ) அதிகாலை பூக்குழி இறங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர்.
அதனை தொடர்ந்து பொங்கல், கிடா வெட்டுதல், முடியிறக்குதல், பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை பக்தர்கள் செய்தனர்.
இன்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் அம்மனை கங்கையில் சேர்த்தல் நடக்க கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
சின்னாளபட்டி: பிள்ளையார் நத்தம் மகா முத்துமாரியம்மன் கோயில் விழா பூச்சொரிதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக குடகனாற்றில் தீர்த்தம் எடுத்தல், நேற்று மாலை பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடந்தது.
கோயில் அருகே குண்டம் வளர்த்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. தலைமை பூசாரி தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
சிலர் கைக்குழந்தையுடனும், அக்னி சட்டி, 10 அடி நீள அலகு குத்திய நிலையில் பூக்குழி இறங்கினர். நிர்வாக குழுவினர் உலகநாதன், முருகேசன், கிரஷர் பாலு, ஒன்றிய தலைவர் மகேஸ்வரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், ஊராட்சி தலைவர் உலகநாதன் பங்கேற்றனர்.
செந்துறை: சொறிப்பாறைபட்டி முத்துமாரியம்மன் கோயில் விழா மே 19ல் தொடங்கியது. பக்தர்கள் முளைப்பாரி, பொங்கல், மாவிளக்கு, அக்னிசட்டி, பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.