/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிக ஒலி சைலன்ஸர்கள் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
/
அதிக ஒலி சைலன்ஸர்கள் ஏர் ஹாரன்கள் பறிமுதல்
ADDED : மே 09, 2024 06:16 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் பொது மக்களுக்கு இடையூறாக டூவீலர்,பஸ்களில் பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்கள்,ஏர் ஹாரன்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் நகரில் மக்களை அச்சுறுத்தும் விதமாக சிலர் தங்கள் டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தி கொண்டு அதி வேகத்தில் செல்கின்றனர். இதுபோன்ற சைலன்ஸர்களிலிருந்து வரும் சத்தம் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளை பதற்றமடைய செய்து விபத்துக்களை ஏற்படுத்தும் நிலை தொடர்கிறது. இதனால் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். திண்டுக்கல்லில் இயங்கும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பொருத்தி கொண்டு அவர்களும் இதேபோக்கையே கடை பிடிக்கின்றனர். திண்டுக்கல் நகர் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி,எஸ்.ஐ.,திலிப் தலைமையிலான போலீசார் நேற்று திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு தனியார் பஸ்களை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வைத்திருந்ததாக 3 பஸ்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து,
10 பஸ்களில் ஏர் ஹரான்கள் பறிமுதல் செய்யப்பட்டது. டூவீலர்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தியதாக 20க்கு மேலான டூவீலர்களிலிருந்து சைலன்ஸர்கள் பறிமுதல் செய்து ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.