/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜெபக்கூடத்தை அகற்ற ஹிந்து முன்னணி முறையீடு
/
ஜெபக்கூடத்தை அகற்ற ஹிந்து முன்னணி முறையீடு
ADDED : பிப் 15, 2025 04:42 AM
நிலக்கோட்டை : நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் துணைத் தாசில்தார் ஜெயக்குமாரிடம் ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமையில் இந்து முன்னணியினர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
விராலிப்பட்டி ஊராட்சியில் வீட்டு மனை இடங்களாக வாங்கி அதில் வீடு கட்டி திடீரென ஒருவர் ஜெப கூடம் நடத்தி வருகிறார். இந்த பகுதியில் பெரும்பான்மையாக ஹிந்துக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அரசு அனுமதி இல்லாமல் ஜெபக்கூடம் கட்டுவது சரியான முகாந்திரம் இல்லை. உடனடியாக ஜெபக்கூடத்தை அகற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
மனுவை பெற்ற துணை தாசில்தார் ஜெயக்குமார் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பா.ஜ ., நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் லட்சுமணன், ஒன்றிய செயலாளர் விக்னேஷ், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் சங்கிலி, ரமேஷ், தங்கபாண்டியன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் ஆனந்த், வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சிவா, பா.ஜ., வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ராஜ்குமார் உடன் இருந்தனர்.

