/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது
ADDED : மார் 09, 2025 03:33 AM
திண்டுக்கல் : ஹிந்து முன்னணி மாநில தலைவர் , செயலர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட ஹிந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
வேடசந்துாரில் அபிராமி அம்மன் சிலை வைத்து பூஜை செய்ய முயற்சித்த ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்த நிலையில், திருப்பூரில் இருந்து திண்டுக்கல் வந்த மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கானோரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
இதை கண்டித்து ஹிந்து முன்னணியினர் சார்பில் திண்டுக்கல்லில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில நிர்வாககுழு உறுப்பினர் ஜெகன் தலைமை வகித்தார். பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், ஹிந்து முன்னணி மாவட்ட செயலர்கள் மணிமாறன், செந்தில்வேலு, கோபால், நகர் செயலர் கோகுல் உட்பட 50க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.