/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு; தன்னார்வலர்கள் உதவி
/
ஆதரவற்ற மூதாட்டிக்கு வீடு; தன்னார்வலர்கள் உதவி
ADDED : செப் 11, 2024 12:51 AM

நத்தம் : நத்தம் அருகே காட்டுப்பட்டியில் ஆதரவற்ற மூதாட்டிக்கு தன்னார்வலர்கள் இணைந்து ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீடு கட்டி கொடுத்துள்ளனர்.
கம்பிளியம்பட்டி காட்டுப்பட்டியில் வசித்து வருபவர் பார்வதி 75. கணவர் இறந்ததால் ஆதரவின்றி சிதிலமடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
இதை கண்ட பசியில்லா தேசம் உருவாக்குவோம் அறக்கட்டளையினர் புதிய வீடு கட்டித்தர முடிவு செய்தனர். அதன்படி ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய வீட்டை கட்டினர்.
இதை டாக்டர்கள் அமலாதேவி, செல்வராணி திறந்து வைத்தனர். இதோடு மூதாட்டிக்கு 6 மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள், படுக்கை விரிப்புகள், சோலார் லைட், சேலை, பாத்திரங்களையும் வழங்கினர். அறக்கட்டளை நிர்வாகி பிரேம், சவுந்தரராஜன் நன்றி கூறினர்.