ADDED : ஆக 17, 2026 07:53 PM
ஆயக்குடி: பழநி ஆயக்குடி அருகே பச்சளநாயக்கன்பட்டியில் கே.பி.கே., கார்த்தி இல்ல திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர், கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ., சக்கரபாணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தி.மு.க., துணைப் பொதுச் செயலாளர் சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மநாபன், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ., காளியப்பன், திருப்பத்துார் முன்னாள் எம்.எல்.ஏ., நல்லதம்பி, திண்டுக்கல் முன்னாள் எம்.பி., வேலுச்சாமி, ஆலங்குளம் ஒன்றியத் தலைவர் திவ்யா, கட்சி பிரமுகர் மணிகண்டன், அம்மன் கம்யூனிகேஷன் வஞ்சிமுத்து, ஸ்ரீ லட்சுமி டிரேடர்ஸ் கருணாமூர்த்தி, போர்த் டைமென்ஷன் ஆர்கிடெக்சர் அண்டு இன்டீரியர் சிவராம் குமார் உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் பங்கேற்று வாழ்த்தினர். விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கே.பி.கே., கார்த்தி, கனிமொழி, பிரணவ், பிரணவி ஆகியோர் வரவேற்றனர்.
