ADDED : மார் 06, 2025 03:48 AM

திண்டுக்கல்: மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் குயின்சிட்டி ரோட்டரி கிளப், டெல்லி தெற்கு ரோட்டரி சங்கம், டெல்லி சவுத் எண்ட் ரோட்டரி சங்கம், டெல்லி தென்கிழக்கு ரோட்டரி சங்கம், பரிதாபாத் என்.ஐ.டி.,ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மெகா இலவச ஹெச்.பி.வி., தடுப்பூசி முகாமை திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள காமராஜர் வித்யாலயாவில் நடத்தியது.
1000 இளம் மாணவர்களுக்கு இலவசமாக ஹெச்.பி.வி., தடுப்பூசி வழங்கப்பட்டது. கலெக்டர் சரவணன், மேயர் இளமதி , ரோட்டரி மாவட்டம் 3000 ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, மருத்துவக்கல்லுாரி தலைவர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி முன்னிலை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட ஆளுநர்கள் ராஜா கோவிந்தசாமி,மகேஷ் திரிகா, ரோட்டரி கர்பப்பை வாய்ப் புற்றுநோய் அழிப்பு திட்ட தலைவர் வந்தனா பல்லே பேசினர். செர்வி கியூர் திட்ட சேர்மன் டாக்டர் பாலசுந்தரி, துணை சேர்மன் வினிதா முரளிதரன், செயலர் சித்ரா ஜெயன், துணை செயலர் மல்லிகா, பொருளாளர் நளினா , குயின் சிட்டி சங்க தலைவர் கவிதா செந்தில்குமார், செயலர் பார்க்கவி சந்தோஷ் பங்கேற்றனர். 2ம் கட்டத் தடுப்பூசி முகாம் செப்டம்பரில் நடக்க உள்ளது.