/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஓட்டுப்பதிவு நாளன்று விடுமுறை இல்லையேல் நடவடிக்கை: வணிக நிறுவன மேலாளர்கள் கூட்டத்தில் இணை ஆணையர் அறிவுறுத்தல்
/
ஓட்டுப்பதிவு நாளன்று விடுமுறை இல்லையேல் நடவடிக்கை: வணிக நிறுவன மேலாளர்கள் கூட்டத்தில் இணை ஆணையர் அறிவுறுத்தல்
ஓட்டுப்பதிவு நாளன்று விடுமுறை இல்லையேல் நடவடிக்கை: வணிக நிறுவன மேலாளர்கள் கூட்டத்தில் இணை ஆணையர் அறிவுறுத்தல்
ஓட்டுப்பதிவு நாளன்று விடுமுறை இல்லையேல் நடவடிக்கை: வணிக நிறுவன மேலாளர்கள் கூட்டத்தில் இணை ஆணையர் அறிவுறுத்தல்
ADDED : ஏப் 13, 2024 02:40 AM
திண்டுக்கல் : ''ஓட்டுப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்கவில்லை என புகார் வந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திண்டுக்கல் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் நடந்த அனைத்து வணிக சங்க பிரதிநிதிகள், வணிக நிறுவனங்களின் மேலாளர்கள் ,உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கட்டுமானத் தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் ஓட்டுப்பதிவு நாளான ஏப்.19 ல் ஓட்டளிக்க ஏதுவாக விடுப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும். முரண்பாடு காணப்படும் நிறுவனங்களின் மீது அபராதமாக ரூ.5000 வரை விதிக்கப்படும்.
சம்பளம் பிடித்தம் செய்த நிறுவனங்களின்மீது கேட்பு மனு தாக்கல் செய்யப்படும். அனைவரும் ஓட்டளிப்பதை நிறுவனங்கள் உறுதி செய்வதோடு ஒத்துழைப்பு அளித்து ஓட்டு சதவீதத்தை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கண்காணிக்க திண்டுக்கல், தேனி, கருர் மாவட்டங்களில் 3 நிலை அலுவலர்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்கப்படாமல் இருந்தால் புகார் அளிக்கலாம். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உதவி ஆணையர் மலர்கொடி, துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி, தேனி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மனுஜ் ஷ்யாம் ஷங்கர், கரூர் மாவட்ட உதவி ஆணையர் ராமராஜ் ,திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள், தொழில் நிறுவன மேலாளர்கள், உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
புகார் எண்கள் அறிவிப்பு : திண்டுக்கல் மாவட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் 97897 23235, துணை ஆய்வாளர் 99523 05662, உதவி ஆய்வாளர் 98944 11542, தேனி மாவட்டத்திற்கு உதவி ஆணையர் 86675 70609, உதவி ஆய்வாளர் 98421 88587, கரூர் மாவட்டத்திற்கு உதவி ஆணையர் 94438 25445, உதவி ஆய்வாளர் 97913 55205 ல் புகார் அளிக்கலாம்.

