/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் காங்., ரகளை அமைச்சர்கள் முன்னிலையில் கோஷ்டி பூசல்

ADDED : மார் 23, 2024 01:52 AM
பழநி:பழநியில் நடந்த 'இண்டியா' கூட்டணி வேட்பாளர் அறிமுகம், செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்., கோஷ்டி பூசலால் ரகளை ஏற்பட்டது.
பழநியில் இண்டியா கூட்டணியின் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தம் அறிமுகம், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் நிர்வாகிகள் வரிசையாக பேசினர். காங்., நகர தலைவர் மாரிகண்ணு பேச வந்தபோது அவரது கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ., செந்தில்குமார் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் ஒரு தரப்பு காங் ., நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்., பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் கட்சியின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது கிடையாது. கட்சிக்கு தொடர்பில்லாத நபரை பழநி நகர தலைவராக அறிவித்துள்ளார். மாநிலத் தலைமை அறிவுறுத்தலின்படி முத்து விஜயன் நகர தலைவராக செயல்பட்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் அவரை புறக்கணித்து சம்பந்தமில்லாதவரை கூட்டத்தில் பேச அழைத்ததால் வட்டார, நகர நிர்வாகிகள் வெளியேறினோம் என்றார்.