ADDED : மே 27, 2024 06:12 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் - நத்தம் ரோடு அரசு ஐ.டி. எதிர்புறம் புதிதாக கட்டப்பட்ட தேவ் மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினர். பொது மருத்துவம்,குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்னாள் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெயபாலன் தலைமை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர் மங்கையர்கரசி முன்னிலை வைத்தார். தேவ் மருத்துவமனையின் இயக்குநர்கள் டாக்டர் சத்யதேவ், டாக்டர் சுசீத்தா ஷாலினி ஆகியோர் வரவேற்றனர். அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் மருதராஜ், பாசறை மாநில செயலாளர் வி.பி.பரமசிவம், வழக்கறிஞர் சீனிவாசன், முன்னாள் தலைமை ஆசிரியை சுலோச்சனா, திரிபுரா மாவட்ட வன அலுவலர் எஸ்.பிரபு, சரண்யா பிரபு, சுசி டிரேடர்ஸ் உரிமையாளர் சுசிந்தர், சக்தி தீபா டாக்டர்கள் சுசி பிரதீப், சாருமதி, திண்டுக்கல் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் ஆவின் சேர்மன் திவான் பாட்சா,ஜெ.பேரவைசெயலாளர் பாரதி முருகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன்,நிர்வாகிகள் வி.டி.ராஜன், பகுதி செயலாளர்கள் சுப்ரமணி, மோகன், சேசு ,முரளி , தொழிலதிபர் காமணன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் பங்கேற்றனர்.

