/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' சலேத் மாதா சர்ச் விழா துவக்கம்
/
'கொடை' சலேத் மாதா சர்ச் விழா துவக்கம்
ADDED : ஆக 06, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் சலேத் மாதா சர்ச் 158வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி புனித சலேத் அன்னை உருவம் பொறித்த கொடி கொடைக்கானல் மூஞ்சிக்கல் சர்ச்சில் இருந்து ஊர்வலமாக சலேத் மாதா சர்ச்சிற்கு எடுத்து செல்லப்பட்டது.
இதைதொடர்ந்து சிறப்பு திருப்பலி உடன் கொடியேற்றம் நடந்தது. கொடைக்கானல் வட்டார பாதிரியார் சிலுவை மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆக. 14ல் மின் அலங்கார தேர்வு பவனி நடக்கிறது .