/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பண்ணை கல்லுாரியில் ஆய்வகம் துவக்கம்
/
பண்ணை கல்லுாரியில் ஆய்வகம் துவக்கம்
ADDED : ஏப் 22, 2024 05:30 AM

திண்டுக்கல், : பண்ணை பார்மசி கல்லுாரியின் ஆராய்ச்சி, கல்வித் திறனை உயர்த்தும் நவீன ஆய்வகத்தை எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை., துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி துவங்கி வைத்தார். பண்ணை குழும நிறுவனங்களின் தலைவர் கார்த்திகேயன்,கல்லுாரியின் முதல்வர் கணேசன் ஆண்டறிக்கை வாசித்தார்.பண்ணை நிறுவனங்கள் தலைமை நிர்வாக அதிகாரி கோகுலகிருஷ்ணன், எதிர்கால திட்டங்கள், உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் இணை கல்வி திறமைகளை பற்றி விவரித்தார்.கல்லுாரி ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்,ங்கீகாரங்களை துணைவேந்தர் நாராயணசாமி வழங்கினார்.
கல்லுாரி ஆசிரியர்,பணியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கல்லுாரி துணைத் தலைவர் பரத்ஸ்ரீனிவாஸ், நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன் பங்கேற்றனர்.
நிர்வாக அலுவலர் மஞ்சுளாதேவி வாழ்த்தினார். ஏற்பாடுகளை பார்மசி கல்லுாரி ஊழியர்கள் செய்தனர்.

