sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீராதாரங்களில் தொடரும் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு; குடிநீர் தட்டுப்பாடுகளால் இன்னலை சந்திக்கும் மக்கள்

/

நீராதாரங்களில் தொடரும் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு; குடிநீர் தட்டுப்பாடுகளால் இன்னலை சந்திக்கும் மக்கள்

நீராதாரங்களில் தொடரும் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு; குடிநீர் தட்டுப்பாடுகளால் இன்னலை சந்திக்கும் மக்கள்

நீராதாரங்களில் தொடரும் தண்ணீர் திருட்டு அதிகரிப்பு; குடிநீர் தட்டுப்பாடுகளால் இன்னலை சந்திக்கும் மக்கள்


ADDED : பிப் 24, 2025 04:04 AM

Google News

ADDED : பிப் 24, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பயிர்களை காக்க குடிநீர் இணைப்பு, குடிநீர் ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுக்கும் விவசாயிகளால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தை பொறுத்தமட்டில் விவசாயமே பிரதானமாகும். சில ஆண்டுகளாக மாறிவரும் சீதோஷ்ண நிலையால் நிலத்தடி நீர்மட்டம் சரிவடைகிறது. இங்குள்ள ஊராட்சி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆழ்துளை , கிணறுகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் மலைப்பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, நத்தம், ஆடலுார், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து உருவாகும் நீராதாரங்களை தேக்கி அதன் மூலம் ஈர்ப்பு விசை மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இச்சூழலில் கோடை காலம் துவங்கும் நிலையில் குடிநீர் தேவை அதிகரிக்கிறது. பருவமழை காலங்களில் நாள்தோறும் சப்ளை செய்யப்படும் குடிநீர் கோடைகாலத்தில் வாரம் ஒருமுறை சப்ளை செய்யப்படும் சூழல் உள்ளது.

இச்சூழலில் குடியிருப்புகளை ஒட்டிய விவசாய தோட்டங்களுக்கு குடிநீர் பைப் லைன், இணைப்புகள் மூலம் தண்ணீர் எடுக்கும் போக்கு தற்போது அதிகரிக்கிறது. இதனால் உள்ளாட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு உள்ளாட்சித் துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனர். மலைப்பகுதியில் இருந்து உருவாகும் நீராதாரங்கள் தரைப்பகுதியில் உள்ள அணைகளுக்கு செல்லும் முக்கிய நீர் பிடிப்பாக உள்ளது. இத்தகைய நீர்ப்பிடிப்புகளில் மோட்டார் பம்பு மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கும் சூழலால் அணைகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத சூழல் உள்ளது.

இதனால் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திணறுகின்றன. மலைப்பகுதியை பொறுத்தமட்டில் கொடைக்கானல், தாண்டிக்குடியில் குடிநீர் பைப் லைன் மூலம் தண்ணீரை சேமித்து அவற்றை விவசாயத்திற்கு பாய்ச்சும் போக்கு உள்ளது. குடிநீர் ஆதார நீரோடையை மறித்து தண்ணீரை வணிக நோக்கில் காட்டேஜ் , விடுதிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் போக்கும் உள்ளது. ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

நீரோடைகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் பம்ப், வீடுகளுக்கு செல்லும் குடிநீர் பைப் லைன்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us