sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சுதந்திர தினவிழா தொடர்ச்சி.......

/

சுதந்திர தினவிழா தொடர்ச்சி.......

சுதந்திர தினவிழா தொடர்ச்சி.......

சுதந்திர தினவிழா தொடர்ச்சி.......


ADDED : ஆக 16, 2024 05:16 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி,கல்லுாரிகள்,தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

78 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் பூங்கொடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். போலீஸ், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள்,வண்ண பலுான்கள் பறக்கவிடப்பட்டது. எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ.,சேக் முகையதீன் முன்னிலை வகித்தனர். சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 100 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 182 அலுவலர்களுக்கும் பதக்கம்,பாராட்டுச் சான்றிதழ்,84 பயனாளிகளுக்கு ரூ.80.68 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பூங்கொடி வழங்கினார். மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மாவட்ட ஊராட்சித் தலைவர் பாஸ்கரன், துணைத்தலைவர் பொன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் பங்கேற்றனர். தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் நடந்த சுதந்திர தினவிழாவில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி கொடியேற்றினார். திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் இளமதி தலைமையில் கொடியேற்றப்பட்டது. துணை மேயர் ராஜப்பா,கமிஷனர் ரவிச்சந்திரன்,பொறியாளர் சுப்பிரமணியன்,மாநகர திட்டமிடுநர் ஜெயக்குமார் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமை தாங்கினார்.

அரசு போக்குவரத்துக்கழகம், திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் சசிகுமார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். போக்குவரத்து பணியாளர்களின் குழந்தைகளில் 10-ம், 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசுகள் ,தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக 41 குழந்தைகளுக்கு ரூ. 48,500 வழங்கப்பட்டது.

காந்திஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் ரவிசங்கர், ஜெயராஜ், ராமசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தலைவர் புவனேஸ்வரி கொடியேற்றினார். செயலர் முத்துக்குமார் நன்றி கூறினார். திண்டுக்கல் ராம் நகர் குடியிருப்பு நலச்சங்க சார்பாக, நடந்த சுதந்திர தின விழாவில் நலச்சங்க தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். ஜி.டி.என்., கல்லுாரி தலைவர் ரெத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முகமது சித்திக் பேசினார். செயலர் ஷேக் முஜிபுர் ரகுமான் வரவேற்றார். சந்திரசேகர் நன்றி கூறினார். திண்டுக்கல் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். அமைப்புச் செயலர் மருதராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணியன், முரளி பங்கேற்றனர். திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் சார்பாக கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சங்கத் தலைவர் சைலேந்திரராய் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்டத் தலைவர் ஏ.எஸ்.ஏ.சாமி, செயலாளர் கஷ்மீர் அருண், பொருளாளர் மணிப்பாண்டி பங்கேற்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு, பரிசுகள் வழங்கப்பட்டது.

வடமதுரை கொம்பேறிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை தேசிய பசுமை படை இணைந்து சுதந்திர தின விழா முன்னிட்டு 400 மரக்கன்றுகள் வழங்கும் ,நடும் விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வயநமசி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் மருதை கலாம் முன்னிலை வைத்தார். ஆசிரியர் ஜோன் மெர்லின் வரவேற்றார். வடமதுரை மாவட்ட கவுன்சிலர் தண்டாயுதம்,அறக்கட்டளை பேராசிரியர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர் முத்து கார்த்தி, திவாகர் பங்கேற்றனர். நாகவேல் நன்றி கூறினார்.

திண்டுக்கல் ஜி.டி. என் சட்டக் கல்லுாரியில் நடந்த விழாவில் கல்வி குழுமங்களின் தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை கல்லுாரி முதல்வர் ஸ்ரீனிவாசன், துணை முதல்வர் சுடலைமுத்து பங்கேற்றனர். புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஆரோக்கியதாஸ் தேசியக் கொடி ஏற்றினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் புருஷோத்தமன், அரசன் சண்முகம் பேசினர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. திண்டுக்கல் ஓம் சாந்தி சி.பி.எஸ்.இ., அக் ஷசயா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் இ.என். பழனிசாமி கொடியேற்றினார். வாழைக்காய்பட்டி கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சலீமா பேகம் தேசிய கொடியேற்றினார். நிர்வாக அதிகாரி முகமது ரபீக், முதல்வர் முத்துச்சாமி, துணை முதல்வர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சகாயமேரி தலைமையில் விழா நடந்தது. திண்டுக்கல் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளியில் தாளாளர் தாமேதரன் தலைமையில் விழா நடந்தது. செயலர் நளினி முன்னிலை வகித்தார்.

திண்டுக்கல் ஜே.கே., ஸ்ரீசங்கரா பப்ளிக் பள்ளியில் முதல்வர் சரவணக்குமார் தலைமை வகித்தார். செயலர் தர்ஷினி பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில், ராமசாமிபுரம் காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தாளாளர் பத்மநாபன், மதர் தெரசா மண்டல தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் காமராஜ், பொருளாளர் அருணாச்சலம் பங்கேற்றனர். கல்லாத்துப்பட்டி கருணை இல்லத்திற்கு சங்கம் சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஸ்ரீகாமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர் ராமலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் விமலா இயக்குநர்கள் நரசிங்கசக்தி, சித்ரா, அமுதா, ஜோதிலட்சுமி பங்கேற்றனர். நி.பஞ்சம்பட்டியில் நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றினார். தலைமையாரியர் பிரியர் பீட்டர் தலைமை வகித்தார். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். திண்டுக்கல் அக்சுதா பப்ளிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர்கள் மங்களராம், காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவிகள் பாலஹரிணி,நேத்ரா வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக காந்திகிராம பல்கலை பேராசிரியர் சண்முகவடிவு பங்கேற்று கொடிறயற்றினார். முதன்மை முதல்வர் சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசுலோக்சனா, பத்மநாபன், ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, பிரபா, மணிமேகலை, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மேலாளர் பிரபாகரன் பங்கேற்றனர். திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் ரேவதி கொடியேற்றினார்.

திண்டுக்கல்லில் டாக்டர்.ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் அரசுநிதிபெறும் மேல்நிலைப்பள்ளி,தொடக்கப்பள்ளிகளில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. பிள்ளையார் நத்த மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் செல்வராணி தலைமை வகித்தார்.

தாளளர் அப்துல் முத்தலிப் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அரபி ஆசிரியர் முகமது அமீர் பங்கேற்றார். ஆசிரியை கவிதா வரவேற்றார். தலைமையாரியை வர்ஷினி பங்கேற்றனர். பேகம்சாஹிபா நகர தொடக்கப்பள்ளியில் பள்ளப்பட்டி ஊராட்சி தலைவர் பரமன் தலைமை வகித்தார். தலைமையாசிரியை பாத்திமாமேரி வரவேற்றார். முன்னாள் வார்டு உறுப்பினர் பாண்டி முன்னிலை வகித்தார். அசனாத்புர தொடக்கப்பள்ளியில் 45 வது வார்டு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சின்னதம்பி தலைமை வகித்தார்.

பொறுப்பு தலைமை ஆசிரியை அம்பிகாதேவி முன்னிலை வகித்தார். வ.உ.சிதம்பரம்பிள்ளளை சிலை அமைப்பு,பராமரிப்பு டிரஸ்டின் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலர் தனபாலன் வரவேற்றார்.

மேற்கு வட்டாட்சியர் வில்சன், வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் மேயர் மருதராஜ்,முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார் பங்கேற்றனர். டிரஸ்டின் உறுப்பினர் மாரிமுத்து இனிப்புகள் வழங்க பொருளாளர் பெருமாள்சாமி நன்றி கூறினார்.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் நாகராசன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலர் சுப்பிரமணியம் கொடியேற்றினார். சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராமலிங்கம், உயிர் வன அறக்கட்டளை கவியோவிய தமிழன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பொருளாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பில் நடந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். துணை செயலர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தண்டபாணி கொடியேற்றினார். கவுரவ ஆலோசகர் டால்டன், நிர்வாகி நடராஜன், ரோதிராமலிங்கம், சந்திரன், தேவராஜ், மோதிலால், தவசிநாகராஜன், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் வெங்கிடு,முத்துக்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.சீலப்பாடி நகர கூட்டுறவு சங்கத்தில் சுதந்திர தின விழா கொண்டாப்பட்டது. செயலர் நாராயணசாமி கொடியேற்றினார். ஸ்ரீ சாவித்திரி வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்வில் அரிமா சங்க உறுப்பினர் சவுந்திராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பள்ளி செயலர் பஞ்சகண்ணம் வரவேற்றார். தலைமையாசிரியர் கோமதி,தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராணி பங்கேற்றனர். கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் நடந்த நிகழ்வில் வள்ளலாளர் சன்மார்க்க சமூக சேவகர் அருணகிரி கொடியேற்றினார். மான்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் ஜெயந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் நவரத்தினம், கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமகாலிங்கம், காளிதாஸ், திருமுருகன், பத்மநாபன் பங்கேற்றனர். வடமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதுப்பட்டியில் தலைமையாசிரியர் சித்ரா கொடியேற்றனார். திண்டுக்கல் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் நந்தினி, ஆசிரியர் ஜெயெஹலன் பங்கேற்றனர். ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல் மிட்டவுன் சார்பில் நடந்த விழாவில் ரோட்டரி சங்க தலைவர் நாகராஜன் கொடியேற்றினார். ஜெயசீலன், ஆண்டிச்சாமி, முரளிதரன், செல்வராஜ், ராஜன் ஆகியோர் வாழ்த்தினர். உஸ்மான், ஆனந்தன், பாலாஜி, நடராஜன், சிவ சிதம்பரம், அபிராமி கண்ணன், ஜெயசீலன், அப்துல்லா, சங்கரநாராயணன் பங்கேற்றனர். ரவிசங்கர் நன்றி கூறினார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தனபாலன் கொடியேற்றனார்.திண்டுக்கல் தங்கமயில் ஜூவல்லரி சார்பில் டெட்லி உயர்நிலைப்பள்ளியில் 78 மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளித் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், கிளை மேலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கன்னிவாடி: பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி தேசிய கொடியேற்றினார். துணைத் தலைவர் கீதா, அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர் பொன்ராம் கொடியேற்றினார். சுகாதார ஆய்வாளர்கள் கோபாலகிருஷ்ணன், அரவிந்த் பங்கேற்றனர்.

ஸ்ரீராமபுரம்: பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில், பேரூராட்சி தலைவர் சகிலா ராஜா கொடியேற்றினார். செயல் அலுவலர் சிவக்குமார், துணை தலைவர் முருகேசன், வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் நடந்த விழாவில், துணை வேந்தர் பஞ்சநதம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பிரதீபா கொடியேற்றினார். செயல் அலுவலர் இளவரசி, முன்னாள் படைவீரர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். சித்தையன்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் போதும் பொண்ணு தேசிய கொடியேற்றி வைத்தார். செயல் அலுவலர் ஜெயமாலு, துணைத் தலைவர் ஜாகிர் உசேன் பங்கேற்றனர். சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்தாண்டு பிளஸ் 2வில் சாதித்த மாணவி கேப்ரின்ரெக்ஸி கொடியேற்றினார். தாளாளர் சிவகுமார், முதல்வர் திலகம் முன்னிலை வகித்தனர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெனிட்டா மரியா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஆத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மகேஸ்வரி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

ரெட்டியார்சத்திரம்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தலைவர் சிவகுருசாமி கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் கிருஷ்ணன், மலரவன் பங்கேற்றனர். ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் ப.க.சிவகுருசாமி கொடியேற்றினார். சில்வார்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் தனலட்சுமி ராமமூர்த்தி கொடியேற்றினார். துணைத்தலைவர் நதியா செந்தில் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் ராஜேந்திரன் வரவேற்றார். புதுச்சத்திரம் ஊராட்சியில் நடந்த விழாவில் தலைவர் லெட்சுமி தேசிய கொடி ஏற்றி வைத்தார். துணைத் தலைவர் கிருஷ்ணவேணி காளியப்பன், ஊராட்சி செயலர் செந்தில்முருகன் பங்கேற்றனர்.

--கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் தலைவர் செல்லத்துரை கொடியேற்றினார். துணைத் தலைவர் மாயக்கண்ணன், கமிஷனர் சத்தியநாதன் பங்கேற்றனர். தெரசா பல்கலை.,யில் துணைவேந்தர் கலா கொடியேற்றினார். அய்யம்பாளையத்தை சேர்ந்த தியாகி கிருஷ்ணமூர்த்தி கவுரவிக்கப்பட்டார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் கொடியேற்றினார். போக்குவரத்து கிளை அலுவலகத்தில் மேலாளர் ராதாகிருஷ்ணன் கொடியேற்றினார். கொடைக்கானல் 21வது வார்டில் சன் லயன்ஸ் சங்கம் சார்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் தலைவர் டி. பி. ரவீந்திரன் கொடியேற்றினார். தலைவர் சுதாகர், செயலர் செந்தில்குமார், பொருளாளர் மங்கையர்கரசி, முன்னாள் தலைவர்கள் ஆஷா ரவீந்திரன், ஜெரால்டுராஜா பங்கேற்றனர். ரோஜா பூங்காவில் தோட்டக்கலை அலுவலர் நந்தினி கொடியேற்றினார். பிரையன்ட் பூங்காவில் தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கொடியேற்றினார். மாவட்ட வன அலுவலகத்தில் டி.எப்.ஓ., யோகேஷ் குமார் மீனா கொடியேற்றினார். பெரும்பள்ளம் வனச்சரக அலுவலகத்தில் உதவி வன பாதுகாவலர் சக்திவேல் கொடியேற்றினார். கொடைக்கானல் பஸ் ஸ்டாண்டில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்.,தலைவர் அப்துல்கனிராஜா கொடியேற்றினார்.

தாண்டிக்குடி : தாண்டிக்குடி காபி ஆராய்ச்சி நிலையத்தில் காபி வாரிய உறுப்பினர் ரவிசந்திரன் கொடியேற்றினார். துணை இயக்குனர் ஜெயக்குமார், காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் தங்கராஜ் பங்கேற்றனர். பண்ணைக்காடு பேரூராட்சியில் தலைவர் முருகேஸ்வரி கொடியேற்றினார். செயல் அலுவலர் ராஜசேகர் பங்கேற்றனர். பண்ணைக்காடு விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ரஞ்சித் குமார் கொடியேற்றினார். குப்பம்மாள்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் ஜீவா கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் கோகிலா பங்கேற்றனர். மே பிளவர் மழலையர் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் கொடியேற்றினார்.

வத்தலக்குண்டு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பரமேஸ்வரி முருகன் கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், முனியாண்டி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முத்து வரவேற்றார். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சிதம்பரம் கொடியேற்றினார். செயல் அலுவலர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் வரவேற்றார். கூட்டுறவு நகர வங்கியில் செயலாட்சியர் மருதுபாண்டி கொடி ஏற்றினார். மேலாளர் வினோதினி முன்னிலை வகித்தார். சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் நாகரத்தினம் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க தலைவர் வெற்றிச்செல்வன் கொடியேற்றினார். செயலாளர் மனோதீபன், பொருளாளர் மனோகரன் பங்கேற்றனர். மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் நோரீஸ் நடராஜன் கொடியேற்றினார். முதல்வர் ஆத்தியப்பன் முன்னிலை வகித்தார். மவுண்ட் சீயோன் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் பிரசன்னதேவி வரவேற்றார். தாளாளர் லின்னி நோரீஸ் கொடியேற்றினார்.

பட்டிவீரன்பட்டி: சேவகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். தலைவர் வனிதா தங்கராஜன் கொடியேற்றினார். செயலாளர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்தார். பட்டிவீரன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். தலைவர் சியாமளா கொடியேற்றினார். துணைத் தலைவர் கல்பனா தேவி அருண்குமார் பங்கேற்றனர். பட்டிவீரன்பட்டி என். எஸ். வி. வித்யாசாலா தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். தலைவர் காமராஜ் கொடியேற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். செயலாளர் செந்தில்குமரன் வரவேற்றார்.

நிலக்கோட்டை: தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தனுஷ்கோடி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ரெஜினா நாயகம் கொடி ஏற்றினார். ஒன்றிய ஆணையாளர் பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி பஞ்சவர்ணம் பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சுபாஷினிபிரியா கதிரேசன் கொடியேற்றினார். பேரூராட்சி துணைத் தலைவர் முருகேசன், செயல் அலுவலர் மோகன் குமார் பங்கேற்றனர்.

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் 3ம் பகுதி துவக்கப்பள்ளி சுதந்திர தின விழாவிற்கு ஆசிரியர் ராமு தலைமை வகித்தார். மருதாநதி அணை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தார். அய்யம்பாளையம் பேரூராட்சி துாய்மைபணியாளர்கள் 15 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களுள் மூத்த பணியாளர் மாரியம்மாள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஏற்பாடுகளை தன்னார்வலர் கிருஷ்ண பாண்டி செய்தார். பேரூராட்சி பணியாளர் பிரியா பங்கேற்றனர்.

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சீனிவாசன் கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் மதியழகன், வீரகடம்பு கோபு பங்கேற்றனர். பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பழனிச்சாமி கொடியேற்றினார். குஜிலியம்பாறை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., கலையரசன் கொடியேற்றினார். சி.சி.குவாரி செட்டிநாடு சிமென்ட் ஆலையில் ஆலையின் தலைவர் கிருஷ்ணன் கொடியேற்றினார். துணை பொது மேலாளர் (மனித வளம்) ஜெயபிரகாஷ்காந்த் பங்கேற்றனர். டி.கூடலுார் வ.உ.சி., உயர்நிலைப் பள்ளியில் தொழில் அதிபர் பழனிசாமி கொடியேற்றினார். முன்னாள் தலைமை ஆசிரியர் தங்கவேல், பள்ளி குழு உறுப்பினர் கந்தசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் அசோகன் பங்கேற்றனர். ஆலம்பாடி ஊராட்சி சத்திரப்பட்டி காந்திசிலை மைதானத்தில், காங்., மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்., ராமசாமி கொடியேற்றினார். நிர்வாகிகள் சோழராஜன், முருகேசன், வெள்ளைச்சாமி பங்கேற்றனர். குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கணேஸ்வதி கொடியேற்றினார். கூம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., பாண்டியன் கொடியேற்றினார். சிறப்பு எஸ்.ஐ., கள் சிவக்குமார்,

கன்னிமுத்து, ரைட்டர் அம்பிகா, சிறப்பு போலீஸ் குமாரசாமி பங்கேற்றனர். கோவிலுார் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நடராஜன் கொடியேற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் முத்துலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர். குஜிலியம்பாறை கம்பன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி துணை செயலாளர் குமார் கொடியேற்றினார். தாளாளர் அசோகன், நிர்வாகிகள் பிச்சைமுத்து, வேல்முருகன், மாரியப்பன், தலைமை ஆசிரியர் சுரேஷ் பங்கேற்றனர்.

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சசி தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார். துணை தாசில்தார்கள் மணிகண்டன், ஜெகதீஸ்வரன், பிரபுசிவசங்கர் பங்கேற்றனர். நகராட்சியில் தலைவர் திருமலைசாமி தேசியக்கொடி ஏற்றினார். பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, மேலாளர் நாகசாமி, சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் அய்யம்மாள் கொடியேற்றினார். துணைத் தலைவர் காயத்ரி தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், வடிவேல் முருகன் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் டி.எஸ்.பி., முருகேசன் தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் பட்டாபிராமன், நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் சவும்யா, முன்னாள் மாணவர்களான டாக்டர்கள் பாலாஜி, அஜய்குமார் பங்கேற்றனர். காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மழலையர் துவக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் கே.ரங்கசாமி தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியர் செல்வராணி பங்கேற்றனர். ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் திருப்பதி தேசிய கொடி ஏற்றினார். செயலர்கள் சுரேஷ், கண்ணன், மீனா பங்கேற்றனர். பட்ஸ் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாளாளர் கண்ணம்மாள் தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் பொன்கார்த்திக் பங்கேற்றனர். காளாஞ்சிபட்டி எஸ்.பி.எம். ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் ரத்தினம் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். செயலாளர் சங்கீதா, பள்ளி முதல்வர் சிவகவுசல்யா தேவி, அலுவலக மேலாளர் வாணி பங்கேற்றனர். ஸ்ரீராமபுரம் வித்விதா அகாடமி பள்ளியில் பள்ளித் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் நிர்வாகி வெங்கடாஜலபதி தேசிய கொடி ஏற்றினார். தாளாளர் சித்தார்த்தன், செயலர் கவுதமன், அறங்காவலர்கள் சுகன்யா, ராதிகா, பள்ளி முதல்வர் முத்துலட்சுமி பங்கேற்றனர். தொப்பக்காவலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி தேசிய கொடி ஏற்றினார். ஆசிரியர் ஆனந்தம் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் வட்டார தேசிய ராணுவ முன்னாள் வீரர்கள் நலச்சங்கம் சார்பாக நடந்த விழாவில் தலைவர் மணி தலைமை வகித்து தேசிய கொடி ஏற்றினார். பொருளாளர் ரங்கசாமி, செயலாளர் திருமலைசாமி, வழக்கறிஞர் பாரத், உறுப்பினர்கள் பொன்ராஜ், காமராசர், தங்கராஜ், பார்த்தசாரதி, சவடமுத்து, முத்துசாமி, செந்தில்குமார், துணைச் செயலாளர் ஜான்சன் பங்கேற்றனர். தேவத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கலையரசி தேசிய கொடி ஏற்றினார் செவிலியர்கள் விஜயலட்சுமி, திவ்யா, பணியாளர் சின்னச்சாமி பங்கேற்றனர். இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான்வெல்பர் பொன்ராஜ் தேசிய கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இஸ்மாயில் பங்கேற்றனர். பாலப்பன்பட்டி புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சித் தலைவர் சண்முகவேல் தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் பாண்டியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் முத்துச்சாமி, முத்துலட்சுமி, இடைநிலை ஆசிரியர் வெங்கடேஷ் பங்கேற்றனர்.

வடமதுரை: ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பி.தனலட்சுமி கொடியேற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, பி.டி.ஓ., நளினா, ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி, துணைத்தலைவர் கே.தனலட்சுமி பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பத்மலதா முன்னிலையில் தலைவர் நிருபாராணிகணேசன் கொடியேற்றினார். தி.மு.க., நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர். வடமதுரை கலைமகள் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ஆர்.கே.பெருமாள், குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா, கலைமகள் மழலையர் துவக்கப் பள்ளியில் இயக்குனர் அருள்மணி, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொடியேற்றினர். தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ முன்னிலையில் பி.டி.ஏ., தலைவர் நரசிங்கன் கொடியேற்றினார். கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வயநமசி முன்னிலையில் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் கொடியேற்றினார்.

அய்யலுார்: பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் கொடியேற்றினார். செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து, எழுத்தர் மோகன் பங்கேற்றனர். அய்யலுார் ரஞ்சித் மழலையர் துவக்கப் பள்ளியில் முதல்வர் மனோரஞ்சித் தலைமையில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார். அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் திருமாறன் தேசிய கொடியேற்றினார். அய்யலுார் தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குனர் சாந்தி முன்னிலையில் பள்ளி தாளாளர் ஸ்ரீதரன் கொடியேற்றினார்.

எரியோடு: பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். செயல் அலுவலர் சையது அபுதாகிர், தி.மு.க., நிர்வாகிகள் செந்தில்குமார், கார்த்திகேயன் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நிர்மலா முன்னிலையில் பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முருகன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் லட்சுமி கொடியேற்றினர். கலைவாணி மழலையர் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆபிரகாம் முன்னிலையில் நிறுவனர் சாவித்திரி கொடியேற்றினார். கோவிலுார் தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாளாளர் கிருஷ்ணவேணி முன்னிலையில் முதல்வர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். புதுரோடு இ.என்.பி., மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் இளங்கோவன் கொடியேற்றினார். முதல்வர் ராமசந்திரபிரபு, ஒருங்கிணைப்பாளர் லிஸி முன்னிலை வகித்தனர்.

வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கொடி ஏற்றினார். பி.டி.ஓ., சரவணன் பங்கேற்றார். வேடசந்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., காந்திராஜன் கொடியேற்றினார். வேடசந்துார் காங்., அலுவலகத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது கொடியேற்றினார். வேடசந்துார் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் மேகலா கொடியேற்றினார். துணைத் தலைவர் சாகுல் ஹமீது, செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின்,கவுன்சிலர் கார்த்திகேயன் பங்கேற்றனர். வேடசந்துார் பி.வி.எம்., மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் சூடாமணி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் பங்கேற்றனர். வேடசந்துார் சாய்பாரத் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் வின்சென்ட் கொடியேற்றினார். சாய்பாரத் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் நர்மதாஸ்ரீ கொடியேற்றினார். வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் கொடியேற்றினார். எஸ்.ஐ., முத்துராமன், சிறப்பு போலீசார் பாலசுப்பிரமணி, அந்தோணி பங்கேற்றனர்.

தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., திருமலைராஜ் கொடி ஏற்றினார். எஸ்.ஐ., அழகர்சாமி, போலீசார் பழனிசெல்வம்,முனீஸ்வரி, சாந்தி, மாலதி, ரங்கநாயகி பங்கேற்றனர். தாடிக்கொம்பு குருமுகி வித்யாஷ்ரம் பள்ளியில் நிர்வாகி செந்தில் குமார் கொடியேற்றினார். தாளாளர் திவ்யா, தலைமை ஆசிரியர் சியாமளா பங்கேற்றனர்.

நத்தம்: நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி உதயசூரியா தேசிய கொடியேற்றினார். நத்தம் வக்கீல்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினார். நத்தம் யூனியன் அலுவலகம் முன் ஒன்றியகுழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கி கொடியேற்றி காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தினார். யூனியன் ஆணையாளர்கள் மகுடபதி, துணைதலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கி கொடியேற்றினார். செயல்அலுவலர் விஜயநாத், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் பங்கேற்றனர். நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ராமசாமி கொடியேற்றினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணக்குமார், நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் அம்சராஜன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், வனத்துறை அலுவலகத்தில் வனச்சரக அலுவலர் ஜெயசீலன்,அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜேசுதாசன் ஆகியோர் தலைமையில் தேசிய கொடி ஏற்றபட்டது.

பழநி: நகராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ செந்தில்குமார் கொடியேற்றினார். நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர். ரயில்வே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் துாய மணி வெள்ளைச்சாமி கொடியேற்றினார். எஸ்.ஐ.,கள் பொன்னுச்சாமி, மணிகண்டன் பங்கேற்றனர். ஹிந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தலைமை அலுவலகம் முன்பு துணைத் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜெகன் கொடியேற்றினார். பழநி காங்., கட்சி சார்பில் நகரத் தலைவர் முத்துவிஜயன் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட துணை தலைவர் பத்மினிமுருகானந்தம் பங்கேற்றனர். பழநி அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் முன்னாள் மாணவி நிவேதா பங்கேற்றார். பள்ளி நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலர் பட்டாபிராமன், முதல்வர் மங்கையர்க்கரசி பங்கேற்றனர். பழநி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் சண்முகநாதன் தலைமையில் நகர துணைத் தலைவர் திருஞானசம்பந்தம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் மணிகண்ணன் பங்கேற்றனர். பழநி கே.ஜி.,வலசு தேவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஞானம், தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முதல்வர் சந்திரசேகர் பங்கேற்றனர். பழநி ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் காசி ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றினார். முன்னாள் மாணவர் நவநீத பிரபு பங்கேற்றனர்.

நிலக்கோட்டை: நிலக்கோட்டை எச். என். யு. பி. ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் சுசீந்திரன் தலைமை வகித்து கொடியேற்றினார். நிர்வாகக்குழு உறுப்பினர் கருமலை பாண்டியன் முன்னிலை வகித்தார். தாளாளர் உதயசூரியன் வரவேற்றார். முதல்வர் குமரேசன் நன்றி கூறினார்.

கே. சி. எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி காமராஜர் கொடி ஏற்றி வைத்து பேசினார். முதல்வர் நடராஜன் வரவேற்றார்.

ஒட்டன்சத்திரம்: வட்டார இருசக்கர மோட்டார் சைக்கிள் பழுது நீக்குவோர் நலச்சங்கம் சார்பில் 78 அடி நீளம் உள்ள தேசியக்கொடியுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சங்கத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுசீந்திரன் பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது ரபிக் வரவேற்றார். தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ஜானகிராமன், தி.மு.க., நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி தேசிய கொடி ஏற்றினர். சட்ட ஆலோசகர் பழனிச்சாமி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us