/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., ஆர்ப்பாட்டத்தின் போது தனிநபர் தர்ணா
/
தி.மு.க., ஆர்ப்பாட்டத்தின் போது தனிநபர் தர்ணா
ADDED : மார் 11, 2025 05:38 AM

செம்பட்டி: செம்பட்டியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தின்போது அதிகாரிகளை கண்டித்து தனிநபர் நடுரோட்டில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை கண்டித்து நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சவுந்திர பாண்டியன் தலைமை வகித்தார்.
மத்திய அமைச்சரின் உருவ பொம்மையை எரித்து மும்மொழி கொள்கைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது ஆத்துார் ஒன்றியம் பாளையங்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் 33, நடு ரோட்டில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தனக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும், அதிகாரிகள் கவனிப்பு கேட்பதாகவும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டார்.
தி.மு.க.,வினர் சமரசம் செய்து பலனில்லாததால் அவரை குண்டுகட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர்.
இதன் பின் செம்பட்டி போலீசார் ரவிச்சந்திரனை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட
தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முன் அவரது உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடந்தது.
துணை மேயர் ராஜப்பா தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உசேன், ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, கவுன்சிலர்கள் ஜான்பீட்டர், ஆனந்த், இந்திராணி பங்கேற்றனர்.