/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அகற்றப்படாத குப்பையால் பரவுகிறது தொற்று
/
அகற்றப்படாத குப்பையால் பரவுகிறது தொற்று
ADDED : மே 01, 2024 07:19 AM

பெயர் பலகை சேதம்
பட்டிவீரம்பட்டி சிறுவர்பூங்கா பெயர் பலகை சேதமடைந்து தொங்கிக் கொண்டு உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .பூங்கா திறந்த வெளியில் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் சமூக விரோத செயல்களம் அரங்கேரறுகிறது . ராஜ்குமார், பட்டிவீரம்பட்டி.
..............-------குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோடு காளாஞ்சிபட்டி மேம்பாலம் அருகே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனை சீரமைக்க வேண்டிய துறையினர் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்க்கின்றனர். -வடிவேல், ஒட்டன்சத்திரம்.
......................--------
வீணாகும் கட்டடம்
நத்தம் செந்துறை பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் பயன்படுத்தாமலே பஸ் ஸ்டாண்ட் கட்டடங்கள் இடிந்து மக்கள் பணம் வீணாகும் நிலை உள்ளது. சேசுராஜ், செந்துறை.
......---------வடிகாலில் இலைகள் குவியல்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் நீர் வடிகால் பகுதியில் மர இலைகள் மண்டியுள்ளது. மழை காலங்களில் நீர் செல்ல முடியாமல் தேங்குகிறது .கால்வாயில் கால்வாயில் குவிந்துள்ள இலைகளை அகற்ற நடவடிக்கை வேண்டும். செந்தில்குமார், திண்டுக்கல்.
..........---------
மின் கம்பம் சேதம்
திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி கல்லப்பக் கோனான் பட்டி காளிம்மன் கோயில் அருகே மின்கம்பம் சேதம் அடைந்து கம்பி வெளியே தெரிவதால் அருகே செல்ல அச்சத்துடன் சொல்கின்றனர் .விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டும். ஈஸ்வரன், திண்டுக்கல்.
....................----------சாக்கடையில் குப்பை
திண்டுக்கல் அறிவு திருக்கோயில் ரோட்டில் சாக்கடையில் குப்பையை கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் செல்லும் பகுதியில் குப்பை அடைத்துள்ளதால் கழிவு நீர் தேங்கி ரோட்டில் செல்கிறது .இதை சரி வேண்டும். ஆர்த்தி திண்டுக்கல்.
............----------தொற்றுநோய் அபாயம்
திண்டுக்கல்- திருச்சி ரோடு ஏழு மாடி கட்டடம் அருகே குப்பை குவித்து பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் கடந்து செல்லும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது .குப்பை உடனுக்குடன் அகற்ற வேண்டும். கிருஷ்ணமூர்த்தி, திண்டுக்கல்.
..............--------