/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடையாள அட்டைக்கு பதிய அறிவுறுத்தல்
/
அடையாள அட்டைக்கு பதிய அறிவுறுத்தல்
ADDED : மார் 12, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்; கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் நடராஜன் அறிக்கை: கொடைக்கானல் உழவர் நலத்துறை , தோட்டக்கலைத்துறை மூலமாக விவசாயிகளுக்கான அடையாள அட்டை எண் பெறுவதற்கு மார்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையம், ஊராட்சி அலுவலகத்தில் உள்ள சி.ஆர்.பி., அலுவலர்களிடம் நில ஆவணம், சிட்டா, ஆதார் அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட அலைபேசியுடன் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது