நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் தமிழ்த்துறை, இளந்தளிர் இலக்கிய மன்றம் சார்பில் உலகத் தாய்மொழி தினம், தேசிய கருத்தரங்கம் நடந்தது. தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர் தேன்மொழி தொடங்கி வைத்தனர்.
தமிழ்த்துறை பேராசிரியர்கள் பிரதீபா வரவேற்றார். பேராசிரியர் சிவசவுந்தர்யா பேசினார். பழனியாண்டவர் கலை, பண்பாட்டு கல்லுாரி தமிழ் உயராய்வு மையம் உதவி பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் உலக தாய் மொழியின் சிறப்பு குறித்து பேசினார். தாய்மொழி தின கலைத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார். தமிழ்த்துறை தலைவர் கோகிலமீனா ஏற்பாடுகளை செய்தார்.

