/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தொழிலாளி கொலையில் மூவரிடம் விசாரணை
/
தொழிலாளி கொலையில் மூவரிடம் விசாரணை
ADDED : மே 09, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: கரியாம்பட்டியை சேர்ந்த சக்திவேல், நடுப்பட்டியைச் சேர்ந்த அழகுபாண்டி தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அழகு பாண்டி உறவினர் ஆண்டாள் 55 மர்ம நபர்கள் மே 6ல் கொலை செய்தனர். இதன் காரணமாக அக்கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எஸ்.பி., பிரதீப் போலீசார் கரியாம்பட்டியைச் சேர்ந்த மூவரிடம் விசாரிக்கின்றனர்.
கொலையான ஆண்டாள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கவும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடியிடம் கிராமத்தினர் புகார் மனு கொடுத்தனர். அதில் உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால் ஆண்டாளின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.