ADDED : மே 05, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் சார்பில் கோடை கால பயிற்சி முகாம் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளியில் நாளை மறுதினம் (மே 7) முதல் மே 22 வரை நடக்கிறது.
இதை 21 வயதிற்கு உட்பட்டோர் 'ஸ்டைகர்' உடன் வந்து பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்பவர்கள் மட்டுமே மாநில ஜூனியர் கேரம் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர்.
பயிற்சியின் இறுதியில் ஒற்றையர் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 ல் தொடர்பு கொள்ளலாம் என செயலாளர் ஆல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார்.