/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கேரம் போட்டியில் பங்கேற்க அழைப்பு
/
கேரம் போட்டியில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 01, 2024 05:21 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் , திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் இணைந்து 13ம் ஆண்டு கோபாலகிருஷ்ண நாயுடு - காவேரி அம்மாள் நினைவு கேரம் சாம்பியன்ஷிப் போட்டி ஆக.3, 4 ல் திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி., ரோட்டரி ஹாலில் நடக்கிறது .
12,14, 18 வயதிற்குட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவில் நடக்கிறது. போட்டியாளர்கள் ஸ்டைகர், மதிய உணவு ,பள்ளிச்சீருடையுடன் வர வேண்டும். 3ம் தேதி மாணவர்களுக்கும், 4ம் தேதி மாணவிகளுக்கும் போட்டிகள் நடைபெறும். போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய இறுதி நாள் ஆக.1 . dindigulcarrom@gmail என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம். விபரங்களுக்கு 97860 61985, 78457 89569 ல் அணுகலாம். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.