/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகள்
/
'கொடை' சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகள்
'கொடை' சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகள்
'கொடை' சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகள்
ADDED : மார் 03, 2025 05:02 AM
கொடைக்கானல்: கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் தொடரும் முறைகேடுகளால் பொதுமக்கள் வெகுவாக பாதித்தும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இங்கு தங்களுக்கென சொத்துக்களை வாங்குவதிலும் ஆர்வம் செலுத்துகின்றனர். இவ்வாறான சூழலில் இங்கு பதிவு செய்யப்படும் நிலங்களின் தன்மை குறித்து முறையாக ஆய்வு செய்யப்படாமல் இஷ்டம்போல் பதிவு செய்யும் போக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது. இங்கு வகைப்படுத்தப்படாத நிலங்கள், இஷ்டம்போல் பதிவு செய்யும் போக்கிற்கு இணக்கமாக சார் பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது என தொடர் புகார்கள் எழுகின்றன. மாவட்டத்திலேயே பதிவின் மூலம் அதிக வருவாய் ஈட்டும் அலுவலகமாக கொடைக்கானல் உள்ளது. இச்சூழலில் இங்கு வருவாய்த்துறையினரால் ரத்து செய்யப்பட்ட டிகேடி பட்டா நிலங்கள் பதிவு செய்வது, வில்லங்கமான நிலங்கள் பதிவது, பத்திரம் காணவில்லை என போலீசார் மூலம் சான்றிதழ் பெற்று பதிவு செய்தல், வருவாய்த்துறை, பதிவுத்துறை கை கோர்த்து அரசு நிலங்கள் மட்டுமல்லாது அரசு அனுமதி பெறாத நில வகைகள் இஷ்டம் போல் பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்டதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. புரோக்கர்களின் ஆதிக்கத்தால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக 4 க்கு மேற்பட்ட சார்பதிவாளர்கள் மாற்றப்பட்டனர். ஆண்டுதோறும் மாவட்ட பதிவுத்துறை கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தை கண்காணிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்த போதும் ஏனோ கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் களஆய்வு என்பது நடப்பதில்லை.