/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை நிர்வாகம் கவனம் செலுத்துவது அவசியம்

ADDED : செப் 16, 2024 06:08 AM

பாலக்காடு மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல பாதையாக மாற்றும் பணி 2009ல் தொடங்கப்பட்டது. அப்போது இந்தப் பாதையில் ராமேஸ்வரம்- கோயம்புத்துார், துாத்துக்குடி -- மதுரை - -கோவை இன்டர்சிட்டி, திண்டுக்கல்- - கோவை திண்டுக்கல் - -பழநி, கேரளாவிலிருந்து சில ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த சேவைகள் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருந்தது. அகலப்பாதை பணிக்காக இந்த ரயில்கள் 2009ல் நிறுத்தப்பட்டது.
பணிகள் முடிவுற்று முதல் கட்டமாக 2012ல் திண்டுக்கல் - பழநி இடையே ரயில் போக்குவரத்து தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 2014ல் பழநி பொள்ளாச்சி ரயில் பாதை பணிகள் முடிந்தது. இறுதி கட்டமாக பொள்ளாச்சி- போத்தனுார் மீட்டர் கேஜ் பாதை அகல பாதையாக மாற்றம் செய்யப்பட்டு 2017ல் போக்குவரத்து தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பாதையில் சில ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம், பழநி சுற்றியுள்ள கிராமப் பகுதியிலிருந்து நுாற்றுக்கணக்கான மக்கள் கோவை,மதுரைக்கு கல்வி, வேலை, பிற அலுவல் பணிக்காக செல்கின்றனர்.
மதுரையில் இருந்து கோவைக்கு ஒரு ரயிலும், திண்டுக்கல்- பாலக்காடு வழித்தடத்தில் 3 ரயில்களும் இயங்குகின்றன. அகல ரயில் பாதையில் இன்னும் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் பல நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். ரயில்வே நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்த வேண்டும்.