/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி மாடியிலிருந்து குதித்த மாணவி காயம் மயக்க மருந்து கொடுத்து கடத்தி வந்ததாக தகவல்

ADDED : ஜூலை 04, 2024 02:26 AM
வடமதுரை: வடமதுரை தனியார் பள்ளி மாணவி மாடியிலிருந்து குதித்த நிலையில், தன்னை மயக்க மருந்து கொடுத்து கடத்தி வந்து தள்ளி விட்டதாக கூறியது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
வடமதுரை போலீஸ் ஸ்டேஷன் அருகில் செயல்படும் தனியார் பள்ளி 8ம் வகுப்பு மாணவி ,நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு மாடியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து வடமதுரை போலீசார் விசாரித்ததில் , பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தபோது தன்னை மயக்க மருந்து கொடுத்து கடத்தி வந்து தள்ளி விட்டதாக மாணவி தெரிவித்தார். குழப்பமான போலீசார் பள்ளி வளாகத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுப்படி விசாரித்து வருகின்றனர்.