ADDED : மே 05, 2024 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிளிக்கை : அம்பிளிக்கை ஜேக்கப் கிறிஸ்தவ கல்லுாரியில் 27வது ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி செயலர் நிர்மலாஜெயராஜ் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி முதல்வர் பினித் முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வைத்தார். மாணவர்கள் செயலாளர் காருண்யா தேவி வரவேற்றார். கனடா சில்ட்ரன் பிலீவ் தலைமை சர்வதேச புரோக்ராம் ஆபிசர் பெலிண்டா பென்னட் துறைவாரியாக முதல் மதிப்பெண் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்த மாணவர்களுக்கு சான்றிதழ்,பரிசுகளை வழங்கினார். கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் திவ்யா நன்றி கூறினார். வணிக மேலாண்மை துறை தலைவர் கருப்புசாமி, நிர்வாக அலுவலர் ஜெயபாரதி விழாவை ஒருங்கிணைத்தனர்.