ADDED : மே 19, 2024 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி முருகன் கோயில் அடிவாரம் கிரிவலப் பாதையில காளையை அலங்காரத்துடன் பக்தர்கள் அழைத்து வந்தனர்.
பழநியில் வைகாசி விசாக திருவிழா நடைபெறும் நிலையில் பல்வேறு பகுதியிலிருந்துபக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவு பகுதி பக்தர்களும் தீர்த்தக்காவடி எடுத்து வந்த நிலையில், வீரக்குமார் சுவாமி கோயில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரி வீதி வலம் வர செய்தனர்.இதன்பின் பாதயாத்திரை பக்தர்கள் முருகன் கோயிலில் தரிசனம் செய்து திரும்பினர்.

