/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
/
காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 23, 2024 05:01 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே புதுஅத்திக்கோம்பை மஹா கணபதி, பஞ்சமுக மஹா கணபதி, பாலமுருகன், மஹாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இக்கோயில் கும்பாபிஷேக விழா ஆக.19 ல் விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து மஹாசங்கல்பம், புண்யாக வாசகம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை நடந்தது.
அன்று மாலை ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து கரகாட்டம், வானவேடிக்கை, தேவராட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் தீர்த்த காவடிகள் ஊர்வலமாக புதுஅத்திக்கோம்பை மாகாளியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தது.
ஆக.20 காலை தீர்த்தம் செலுத்துதல், தீர்த்த சங்கிரஹனம், யாகசாலை அலங்காரம் நடந்தது. அன்று மாலை மங்கல இசையுடன் முளைப்பாரி அழைத்தல் நடந்தது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி, கும்பாலங்காரம், முதற்கால யாக பூஜை ஆரம்பமானது.
நேற்று முன்தினம் காலை விசேஷ சந்தி, புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பு, இரண்டாம் கால யாக பூஜை, சூரிய பூஜை, காயத்ரி மந்திரகோமங்கள் நடந்தது.
மதியம் விசேஷ திரவியங்கள் ஹோமம், அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜை தொடங்கியது.
நேற்று காலை மங்கல இசை நான்காம் காலையாக பூஜை தொடங்கியது. கும்பங்கள் திருக்கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து மஹாகணபதி, பஞ்சமுக மஹாகணபதி, பாலமுருகன், மஹாகாளியம்மன் கோயில் விமான கோபுரங்களில் சிவாச்சாரியார்களால் புனித தீர்த்த நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
டிரோன் மூலம் பக்தர்களுக்கு தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மஹா தீபாராதனை , விபூதி, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
அன்னதானமும் நடந்தது. புதுஅத்திக்கோம்பை ,குழந்தைவேல்கவுண்டன்புதுார் திருப்பணி குழுவினர்,ஊர் மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.