/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
/
காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜூலை 17, 2024 12:22 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. பள்ளி செயலாளர்கள் மங்களராம்,காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர். 9ம் வகுப்பு மாணவி திரிஜா வரவேற்றார். பள்ளி முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன் பேசினார். காமராஜரின் புகழ்பாடும் பாடல்கள் பாடப்பட்டது. கல்விக்கண் திறந்த காமராஜர் தலைப்பில் 9ம் வகுப்பு மாணவிகள் நித்யஷி, தியாஷினி ,காமராஜரின் வாழ்க்கை வரலாறு தலைப்பில் 9ம் வகுப்பு மாணவர் தமிழ் இன்பன் பேசினர். 9ம் வகுப்பு மாணவிகள் மான்யூலா,காவியவர்ஷினி நன்றி கூறினர். ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசுலோக்சனா, பத்மநாபன், ஞானபிரியதர்ஷினி, வித்யா, பிரபா, மணிமேகலை, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, கார்த்திக் ,மேலாளர் பிரபாகரன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளியில் தாளாளர் பேராசிரியர் எம்.கே.தாமோதரன் தலைமை வகித்தார். உலக சமுதாய சேவா சங்க இயக்குநர் கே. பெருமாள் பேசினார். பள்ளி செயலாளர் நளினி தாமோதரன் முன்னிலை வகித்தார். அச்யுதா பப்ளிக் பள்ளியிலும் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் ஜே.கே.பப்ளிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் சரவணன் தலைமை வகித்தார்.
திண்டுக்கல் அச்யுதா அகாடமி பள்ளியில் பள்ளி செயலாளர் மங்களராம் தலைமை வகித்தார். செயலாளர் காயத்ரி மங்களராம் முன்னிலை வகித்தார். 8ம் வகுப்பு மாணவிகள் சவித்தா, அக் ஷயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். 7ம் வகுப்பு மாணவி லஜித்தா வரவேற்றார். 8ம் வகுப்பு மாணவிகள் நிரஞ்சனா, ஹன்ஷினி பேசினர். 7ம்வகுப்பு மாணவி விஜயகார்த்திகா கவிதை வாசித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை பள்ளி துணை முதல்வர் குணசேகரன் வழங்கினார். 7ம் வகுப்பு மாணவி என்ஸ்லித்தா நத்தானியா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் லட்சுமி, சர்மிளாபேகம், அந்தோணிதாஸ், வில்லி, ஹெர்பட், மேலாளர் கார்த்திகேயன் செய்தனர்.
திண்டுக்கல் மதுரை ரோட்டில் உள்ள லுார்து மாதா மெட்ரிக்., பள்ளியில் காமராஜரின் 122- வது பிறந்த நாளை முன்னிட்டு அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், காமராஜர் பற்றிய கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்க பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் அருள்மேரி தலைமை வகித்தார். முதல்வர் ரெக்ஸிலின்மேரி முன்னிலை வகித்தார். செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் காஜாமைதீன் பரிசுகளை வழங்கினார். ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம் : காளாஞ்சிபட்டி எஸ்.பி. எம்., ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ரத்தினம் தலைமை வகித்தார். பள்ளி செயலர் சங்கீதா முன்னிலை வகித்தார்.